எனக்கென தனிச்சிந்தனையும், தனிச் சித்தாந்தமும் கொண்ட சுதந்திரமானவன்

Thursday, 22 March 2012

மனித வாழ்வு நான்கே நிலைகளால் ஆனது


இது ஒரு வகையில் முந்தைய பதிவின் தொடர்ச்சி. All the world is fair in food and lives என்று யோசித்து முடித்த போதே மனதில் தோன்றியது. கூடுதலாக இந்த கவிதை நினைவில் வந்து தொலைத்ததும் என் சிந்தனைவேகமெடுத்தது,

All the world's a stage,
And all the men and women merely players;
They have their exits and their entrances,
And one man in his time plays many parts,
His acts being seven ages.


என் சிந்தனை ஓட்டத்தை இங்கு பதிவு செய்கிறேன்.

ஒருவரது வாழ்க்கையில் மொத்தமே நான்கு நிலைகள் தான்

  • நான் இந்த நொடி உயிரோடு இருக்கிறேன்,
  • இந்த நொடியில் பசிக்கிறது, உணவு இருக்கிறது உண்கிறேன்.
  • இந்த நொடியில் பசிக்கிறது, உணவு இல்லை, பசியில் வாடுகிறேன்.
  • இந்த நொடியில் நான் உயிரோடு இல்லை என்பதையும் உணர முடியாத நிலையில் என் சவம் இருக்கிறது.


இது மட்டுமே நான் வாழ்க்கையைப் பார்க்கும் பார்வை. எப்போதும் உணவிலேயே இருக்கிறானே என்று நீங்கள் நினைக்காதீர்கள், அதையும் நானே நினைத்துக்கொள்கிறேன். பட்டினியோடு ஒரு மாதத்துக்கு மேல் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரு நபரை எங்காவது பார்த்ததுண்டா? அப்படியே ஒரு மாதத்துக்கு மேல் ஒருவர் வாழ்ந்து கொண்டிருந்தாலும் ஏதோ ஒருவகையில் அவர் உணவை எடுத்துக்கொண்டிருப்பார். தண்ணீராவது அருந்தியிருப்பார். (ஈரோம் ஷர்மிளா உங்களுக்கு நினைவில் வரலாம்) 
சேக்ஸ்பியர் சொல்வது போல குழந்தைப் பருவமோ, இளமையோ, நரை கூடிய கிழப்பருவமோ எதுவாகஇருந்தாலும் ஒருவன் இந்த நான்கு நிலைகளில் மூன்று நிலைகளையாவது கடந்தவனாகத்தான் இருப்பான்.அவன் அப்படி கடக்காத ஏதோ ஒரு நிலையைப் பொறுத்து அவர் அவருடைய வாழ்வில் செல்வத்தில் உழண்டாரா இல்லை ஏழ்மையில் திளைத்தாரா என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஆக என்னைப் பொறுத்த வரை உயிர் வாழ்தலும், உயிர் வாழாதிருப்பதும் உணவு கிடைப்பதையும், கிடைக்காததையும் பொறுத்துதான் என்பேன். அதனால் அழுத்தமாகவும் சொல்கிறேன். மனித வாழ்வு நான்கே நிலைகளால் ஆனது.

No comments:

Post a Comment

© 2011 நெஸ்டர் - ஞானம் பெற்றவன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena