எனக்கென தனிச்சிந்தனையும், தனிச் சித்தாந்தமும் கொண்ட சுதந்திரமானவன்

Thursday, 22 March 2012

மனித வாழ்வு நான்கே நிலைகளால் ஆனது


இது ஒரு வகையில் முந்தைய பதிவின் தொடர்ச்சி. All the world is fair in food and lives என்று யோசித்து முடித்த போதே மனதில் தோன்றியது. கூடுதலாக இந்த கவிதை நினைவில் வந்து தொலைத்ததும் என் சிந்தனைவேகமெடுத்தது,

All the world's a stage,
And all the men and women merely players;
They have their exits and their entrances,
And one man in his time plays many parts,
His acts being seven ages.


என் சிந்தனை ஓட்டத்தை இங்கு பதிவு செய்கிறேன்.

ஒருவரது வாழ்க்கையில் மொத்தமே நான்கு நிலைகள் தான்

  • நான் இந்த நொடி உயிரோடு இருக்கிறேன்,
  • இந்த நொடியில் பசிக்கிறது, உணவு இருக்கிறது உண்கிறேன்.
  • இந்த நொடியில் பசிக்கிறது, உணவு இல்லை, பசியில் வாடுகிறேன்.
  • இந்த நொடியில் நான் உயிரோடு இல்லை என்பதையும் உணர முடியாத நிலையில் என் சவம் இருக்கிறது.


இது மட்டுமே நான் வாழ்க்கையைப் பார்க்கும் பார்வை. எப்போதும் உணவிலேயே இருக்கிறானே என்று நீங்கள் நினைக்காதீர்கள், அதையும் நானே நினைத்துக்கொள்கிறேன். பட்டினியோடு ஒரு மாதத்துக்கு மேல் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரு நபரை எங்காவது பார்த்ததுண்டா? அப்படியே ஒரு மாதத்துக்கு மேல் ஒருவர் வாழ்ந்து கொண்டிருந்தாலும் ஏதோ ஒருவகையில் அவர் உணவை எடுத்துக்கொண்டிருப்பார். தண்ணீராவது அருந்தியிருப்பார். (ஈரோம் ஷர்மிளா உங்களுக்கு நினைவில் வரலாம்) 
சேக்ஸ்பியர் சொல்வது போல குழந்தைப் பருவமோ, இளமையோ, நரை கூடிய கிழப்பருவமோ எதுவாகஇருந்தாலும் ஒருவன் இந்த நான்கு நிலைகளில் மூன்று நிலைகளையாவது கடந்தவனாகத்தான் இருப்பான்.அவன் அப்படி கடக்காத ஏதோ ஒரு நிலையைப் பொறுத்து அவர் அவருடைய வாழ்வில் செல்வத்தில் உழண்டாரா இல்லை ஏழ்மையில் திளைத்தாரா என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஆக என்னைப் பொறுத்த வரை உயிர் வாழ்தலும், உயிர் வாழாதிருப்பதும் உணவு கிடைப்பதையும், கிடைக்காததையும் பொறுத்துதான் என்பேன். அதனால் அழுத்தமாகவும் சொல்கிறேன். மனித வாழ்வு நான்கே நிலைகளால் ஆனது.
Read More

Wednesday, 21 March 2012

All is fair in food and lives.


All is fair in love and war என்றார் சேக்ஸ்பியர். அது அவருடைய கொள்கை. அவருடையதை நான் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக்கென்று தனி சிந்தனையும் எனக்கென்று தனி சிந்தாந்தமும் இருக்கிறது.

என்னைப் பொறுத்தவரை All is fair in food and lives.

உணவில்லாமல் ஒருவனால் எத்தனை நாள் அதிகபட்சம் உயிர் வாழ்ந்துவிடமுடியும்?

ஒரு வாரம் முடியுமா?

அவன் நீரைப் பருகினாலும் அது உணவுதான். அது உண்ணக்கூடிய தகுதி இல்லாததானாலும் அவன் வாய் புகுந்துவிட்ட பிறகு அது உணவுதான். ஒருவனுடைய பதவியால், பொருளால் வந்து சேரக்கூடிய பயன்கள் எதுவானாலும், அவனுடைய பதவியால் பொருளால் விளையக்கூடிய பிரதான பயன் அவன் பசி நீக்குதல்தான். அதன் பிறகுதான் குடும்பம், சொந்தம், நண்பர்கள், தேசம், உலக மாந்தர்கள் எல்லாம். இதற்கு விதிவிலக்கான சிலரும் இருக்கிறார்கள். ஆனால், அவர்களெல்லாம் சிறுபாண்மை. "என் சான் உடம்புக்கு வயிறே பிரதானம்"

எத்தனை புகழிருந்தாலும், பதவியிருந்தாலும் பொருளிருந்தாலும் இதயம் என்ற ஒன்று துடிப்பதை நிறுத்திவிட்ட பிறகு அதாவது உயிர் பிரிந்துவிட்ட பிறகு அந்தப் பெயராலும், புகழாலும் அவனுக்கு என்ன பெரிய நன்மை வந்துவிடப்போகிறது. அவன் சவத்தை எரிக்க சில சந்தணக் கட்டைகளைத் தவிர்த்து. இதிலும் சில விதிவிலக்குகள் உண்டு. "புகழெனின் உயிருங் கொடுக்குவர்" என்று பாடியவனும் இந்த மண்ணில் உண்டு. தனக்கு புகழற்ற சுகவாழ்வு ஒரு வாய்ப்பாகவும், இடர்மிகு புகழ்பெற்ற வாழ்வு மற்றொரு வாய்ப்பாகவும் தரப்பட்ட போது ஹெராக்ளிஸ் புகழ்பெற்ற வாழ்வை தேர்ந்தெடுத்து பித்து பிடித்து தன் மனைவியையும் குழந்தைகளையுமே கொலை செய்தான்.

இப்படிப் புகழுக்காக உயிர் வாழ்ந்தவர்கள் கொஞ்சமே என்பதால் தான் அவர்களைச் சான்று காட்டிக்கொண்டிருக்கிறோம். பசித்த வேளையில் சாப்பிட்டு/சாப்பிடமுடியாமல், இதயம் இயங்கிய வரை வாழ்ந்து பின் இறந்த பல்லாயிரம் கோடி மக்களை அறிந்தவனாகச் சொல்கிறேன் All is fair in food and lives. 
Read More

© 2011 நெஸ்டர் - ஞானம் பெற்றவன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena